நவம்பர் 01ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேசிய எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு, எதிர்வரும் 2023 பெப்ரவரி 28ஆம் திகதி வரை 4 மாதங்களுக்கு செயற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் உறுப்பினர்களாக, ஜயலத் திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர். அதிகாரி, கே. தவலிங்கம், ஐ.ஏ. ஹமீட் ஆகிய நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் எனும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இதற்கான குழு நியமித்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.