மட்டக்களப்பு – வலிந்து காணமாமலாக்கப்பட்டவர்களது உறவுகளின் பேரணி   

0
218
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு
அருகிலிருந்து ஆரம்பமான வலிந்து காணமாமலாக்கப்பட்டவர்களது உறவுகளின்
பேரணி மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நிறைவு பெற்றது.
இதில், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை
மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகள் கலந்து
கொண்டனர்.
இப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் இதன்போது அரசுக்கு எதிராக பல்வேறு
கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும ஏந்தியிருந்தனர்.

 

பேரணின் இறுதியில் மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் கோசங்களை எழுப்பி ஒன்று
கூடியதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு – திருகோணமலை
இணைப்பாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here