கொழும்பிலிருந்து கண்டி வரையில் அதிவேக சொகுசு ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று முதல் விஷேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய கொழும்பிலிருந்து காங்கேசன் துறை வரை பிரதி வெள்ளிக்கிழமைகளிலும், காங்கேசன் துறை முதல் கொழும்பு வரை ஞாயிற்றுக்கிழமைகளிலும் வார இறுதி ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரையும், அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரையும் அதிவேக சொகுசு ரயில் சேவையொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று முதல் மேலும் 20 புதிய பஸ் சேவைகளை சிசுசெரிய திட்டத்திற்குள் உள்வாங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாடசாலை சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளமையினால் பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க சிசுசெரிய போக்குவரத்து திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.