பெருந்தோட்டக் கல்வியை ஊக்குவிக்கும் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

0
269
ஹட்டன் கல்விப் பிராந்தியத்தின் கல்விச் செயற்பாடுகளை நெறிப்படுத்தி வலுப்படுத்தும் நோக்கில், பெருந்தோட்டத்தின் பின்தங்கிய பாடசாலைகளுக்கான கற்பித்தல் செயற்பாட்டில் பட்டதாரிகளின் சேவைகளை வளவாளர்களாகப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO) மற்றும் மனித நேயம் அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களின் பூரண நிதிப் பங்களிப்பில் நடைமுறைப்படுத்துகின்றது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய மாகாண ஆளுநர், சட்டத்தரணி லலித் யு. கமகே தலைமையில் கண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று (29) நடைபெற்றது.
இத்திட்டம் மத்திய மாகாண கல்வி அமைச்சின் முழு மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO) மற்றும் மனித நேயம் அறக்கட்டளை ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.
இங்கு, ஹட்டன் கல்விப் பிராந்தியத்தில் உள்ள நாற்பது பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக இந்த வளவாளர்கள் ஒரு வருட காலத்திற்கு பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
இதன் கீழ் 50 வளவாளர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் மாகாண கல்வி அமைச்சின் உடன்படிக்கையின் கீழ் ஹட்டன் கல்வி வலய அலுவலகத்தின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் பாடசாலை கல்விக்காக பயன்படுத்தப்படுகின்றனர்.
இந்நிகழ்வில், ​​மத்திய மாகாண மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத், ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். விஜேந்திரன், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் திட்ட இயக்குநர் கந்தையா விக்னேஸ்வரன், பெருந்தோட்டக் கல்வி இணைப்பாளர் எம்.பி. சந்திரசேகரன், கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மற்றும் IMHO அமைப்பின் அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here