ஆறு தேசிய விருகளைத் தனதாக்கிக் கொண்ட சூரரைப்போற்று

0
349

சூரரைப் போற்றுதமிழ் திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை), சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளது. இது 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியலில் (2020-ம் ஆண்டுக்கான விருதுகள்) அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்மூன்று விருதுகள், ‘மண்டேலா இரண்டு விருதுகள்என மொத்தம் 10 தேசிய விருதுகளை வசப்படுத்தியிருக்கிறது தமிழ் சினிமா.

இந்திய திரைத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கு தேசிய விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அநத வகையில் 68-வது தேசிய விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள திரைப்படங்களில் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 நவம்பரில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில்சூரரைப் போற்றுவெளியாகி இருந்தது. 2டி எண்டர்டெயின்மெண்ட் பேனரில்சூர்யாஜோதிகாதம்பதியர் இந்த படத்தை தயாரித்திருந்தனர். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி இருந்தார். சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, மோகன் பாபு, கருணாஸ், பூ ராமு, காளி வெங்கட் என பலரும் இதில் நடித்திருந்தனர்.

சூரரைப் போற்றுதிரைப்படம் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியில் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. திரைப்பட விமர்சகர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பிலும் இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இப்போது இந்தப் படம் இந்தி மொழியில் உருவாகி வருகிறது.

இந்தச் சூழலில்தான் ஐந்து விருதுகளை வென்றுள்ளது இந்தத் திரைப்படம். படக்குழுவினருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உலக சினிமா விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here