தெஹ்ரானில் இஸ்மாயில் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இன்று புதன்கிழமை காலை இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா, கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.
இதனை இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இஸ்மாயிலின் காவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு சென்ற ஹமாஸ் தலைவரை நாட்டின் தலைநகரிலேயே வைத்து கொல்லப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.