தமிழ் முற்போக்கு கூட்டணி கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உடன் மேற்கொள்ளப்பட்ட சாசன ஒப்பந்தம் ஒரு ஆவணமாக நுவரெலியாவில் வெளியிடப்பட்டது
இந்த சாசனம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலனி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் செயல்படுத்தப்படும்
இலங்கையில் மேற் கொள்ளப்பட்ட தந்தை செல்வா ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்களை போல் அமைந்திருக்கும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்
இந்த ஒப்பந்தத்தில் மலையக வீட்டு உரிமை காணி உரிமை சுகாதாரம் வேலைவாய்ப்பு கல்வி அபிவிருத்தி மலையத்துக்கான பல்கலைக்கழகம் உட்பட பல உரிமை சார் விடயங்களை உள்ளடக்கியதாக உள்ளது
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான வே. ராதாகிருஷ்ணன் மனோ கணேசன் பழனி திகாம்பரம் உட்பட சமூக செயற்பாட்டாளர்கள் அரசு சார்பற்ற நிறுவன உறுப்பினர்கள் தோட்ட பொது மக்கள் உட்பட நகர வர்த்தகர்களும் பலர் கலந்து கொண்டனர்.