நுவரெலியா பகுதிக்குட்பட்ட கந்தப்பளை, ராகலை கோட்லோஜ்; ஆகிய பிரிவுகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கொடுத்த பிரதேசங்கள் பல வெள்ள நீரில் மூழ்கியுள்ளமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழைக் காரணமாக வீதிகளில் நீர் நிரம்பி வழிந்தோடுவதுடன் தொடர்ச்சியாக தோட்ட பகுதிகளில் மரக்கறி தோட்ட விவசாய நிலங்களிலும் மரக்கறி தோட்ட பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது.
இதனால் குறித்த பகுதிகளில் உள்ள பெரும்பாலான குடும்பங்களின் இயல்பு நிலை பெரிதும்; பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் தகவல்கள் மூலம் அறயக்கூடியதாக உள்ளது.