இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் களத் தொடர்பாடல் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான 10 வருட ஒப்பந்தத்தை Hytera, அதன் இலங்கைக் கூட்டாளரான Securatec உடன் இணைந்து வெற்றிகரமாக வென்றுள்ளது.
Securatec ஏற்கனவே இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு Hytera வின் அதிநவீன MD788 மொபைல் ரேடியோ சாதனங்கள் மற்றும் ஆன்டெனாக்கள் 150 ஐ வழங்கியுள்ளது.
இது பல்துறை டிஜிட்டல் செயல்பாடுகளை வழங்குவதுடன், எந்த சூழ்நிலையிலும் தகவல் பரிமாற்றம், செயல்பாடுகள் மற்றும் சம்பவ பதில் நடவடிக்கை நேரங்களை மேம்படுத்துகிறது. இந்த சாதனங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட புதிய ரேடியோ சாதனங்கள் நீடித்து உழைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதுடன், அவை பணி மேசையிலும் வெளிப் புலத்திலும் எளிதாக செயல்படவல்லவை.
இந்த செயல்திட்டம் தொடர்பில் Hytera Sri Lanka வின் பொது முகாமையாளரான கெவின் கருத்து வெளியிடுகையில், “பொலிஸ் படையின் களத் தொடர்பாடல் வலையமைப்பை மேம்படுத்துவதற்காக, இலங்கை பொலிஸ் திணைக்களத்துடன் இந்த கூட்டுறவை ஏற்படுத்த முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது விரிவான சட்ட அமுலாக்கப் பிரிவு மற்றும் பிற வாடிக்கையாளர்கள் பட்டியலில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ப்பது Hytera வில் எமக்கு மதிப்புக்குரிய ஒரு ஆதாரமாகும். எதிர்காலத்தில் இலங்கை பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.