கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் மகளிர்தின விழா

0
75

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் 8ஆம்  திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் மகளிர் தின விழா கொழும்புத் தமிழ்ச் சங்க தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பார்க்கவி கஜமுகன், சமேஷா ராஜீவ், சாருகேசி கோகுலன், சம்யுக்தா கோகுலன் ஆகியோர் தமிழ் வாழ்த்தினை இசைப்பர்.

கொழும்புத் தமிழ்ச் சங்க பேரவை உறுப்பினர் திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் தொடக்கவுரையையும், கலா அமிர்தலிங்கம் அவர்கள் சிறப்புரையையும் நிகழ்த்துவர்.

திருமதி அகிலத்திருநாயகி சிறிசெயனாந்தபவன், சட்டத்தரணி சபானா குல் பேகம், திருமதி அருந்ததி சத்தியேந்திரா ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளார்கள். கௌரவிப்பு உரையினை முறையே திருமதி வளர்மதி சுமாதரன், திருமதி பவானி முகுந்தன், திருமதி செல்வராணி யோகராஜா ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

முஸ்லிம் மகளிர் கல்லூரியின் உப அதிபர் கு.சந்திரிக்கா பிரியங்கனி அவர்களின் நெறியாள்கையில், மாணவர்கள் வழங்கும் “புயலான பூவை” எனும் எண்ணக்கருவில் நாடகம் இடம்பெறும். கொழும்புத் தமிழ்ச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி.லீலாவதி மோகனசுந்தரம் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுறும்.

கலாநிதி ஜெ.தற்பரன்
பொதுச்செயலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here