உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையை 10-13% இனால் குறைக்க தீர்மானித்துள்ளதாக, இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு பிரதான மூலப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதால் சந்தையில் இனிப்பு வகைகளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து இனிப்பு வகைகளினதும் விலைகள் குறைவடைவதை நுகர்வோர் அவதானிக்கலாமென அச்சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார மேலும் தெரிவித்தார்.
குறித்த உற்பத்திகளுக்கு பிரதானமாக பயன்படுத்தப்படும் சீனி ஒரு கிலோகிராம் ரூ. 40 இனால் குறைக்கப்பட்டுள்ளதோடு, தாவர எண்ணெய் ஒரு கிலோகிராம் விலை ரூ. 250 இனால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.