பிக்பொஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், நேற்று பிரம்மாண்டமாக ஆரம்பமானது.
இலங்கையைச் சேர்ந்த இருவர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் ஊடகவியலாளர் ஒருவரும் போட்டியில் இணைந்துள்ளார்.
யார் இந்த ஊடகவியலாளர்?
பிக்பொஸ் சீசன் 6 இல், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி ஜனனி பங்கேற்கிறார். ஜனனியின் முழுப்பெயர் ஜனனி குணசீலன். ஜனனிக்கு 23 வயதாகிறது. மொடலிங் துறையிலும் இருப்பதால் சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.
செய்தி வாசிப்பாளர் மற்றும் அங்கர் ஜனனியும் பங்கேற்றுள்ளார். இவரும் டிக்டாக் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தவர். இலங்கை தமிழ் மக்களையும் கவரும் வகையில் ஜனனியை பிக்பொஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் விஜய் டிவி இணைத்துள்ளது.
மேலும் இந்த சீசனில் பொதுமக்களும் பங்கேற்கும் வாய்ப்பை விஜய் டிவி வழங்கியுள்ளது.