அட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மூர் குளத்தில் வீழ்ந்த இளைஞனை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

எபோட்சிலி மொன்டிபெயார் தோட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய மைக்கல் பவன் என்பவரே இவ்வாறு ஆற்றில் வீழ்ந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று 01 இரவு எட்டு மணியளவில் அட்டன் நகரிலிருந்து இண்டு நண்பர்களுடன் குறித்த இளைஞன் மென்டிபெயார் தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்ற போதே வீதியோரத்திலுள்ள குளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்களையும் அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குளத்தில் வீழ்ந்த இளைஞனை தேடி மீட்கும் பணியில் அட்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன்
குறித்த இளைஞன் தவறி விழுந்தாரா?  கொலையா, அல்லது தற்கொலையா என பல கோணங்களிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.கிருஸ்ணா