19 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடித்ததில் 13பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளம், காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து சறுக்கி, தரையில் மோதியதில் விமானம் தீப்பிடித்துள்ளது இதில் 13பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்றதையடுத்து, திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்படம்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.