பாடசாலை மாணவி ஒருவர் கார் ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் கெலிஒயா அம்பரப்பொல பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் 11.01.2025. வெள்ளிக்கிழமை காலை 07.15 மணியவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
நேற்று காலை பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த இரண்டு மாணவிகள் சென்று கொண்டிருந்தபோது கருப்பு நிறமுடைய காரில் வந்த இனந்தெரியாத குழுவினர்கள் வண்டியினை நிறுத்தி குறித்த இரண்டு சிறுமிகளை கடத்த முயற்சித்த போது ஒரு சிறுமியை கடத்தி சென்றுள்ளதோடு மற்றுமொரு சிறுமி தப்பிச் சென்றுள்ளதாக காணொளி ஊடாக அறியக்கூடியதாக உள்ளது.
குறித்த சிறுமிகள் கடத்தப்படும் சம்பவம் குறித்த பகுதியல் உள்ள வரத்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி.கேமராவில் பதிவாகியுள்ளது. இதேவேளை வீதியில் பயணித்த நபர்கள் கடத்தப்பட்ட சிறுமியினை காப்பாற்ற முயற்சி செய்த காட்சிகளும் குறித்த கெமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக பேராதனை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர்