ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக் கொள்வதற்காக தற்போது காணப்படும் நீண்ட வரிசைக்கு எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் அமைச்சர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக் கொள்வதற்கு மற்றும் பதிவினை மேற்கொள்வதற்கான தினம் மற்றும் நேரத்தை 1958 எனும் இலக்கத்திற்கு அழைத்தோ அல்லது appointment.labourdept.gov.lk இணையததளமூடாகவோ மேற்கொள்ள முடியும்.

இதுவரை காலமும் நாரஹேன்பிட்டிய தொழில் திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஒன்லைன் வசதிகள் எதிர்வரும் முதலாம் திகதியின் பின்னர் 40 மாவட்ட காரியாலயங்கள், 17 உபகாரியாலயங்கள் மற்றும் 11 வலய காரியாலயங்கள் மூலமும் பெற்றுக் கொள்ள முடியும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.