சுமார் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (Extended Fund Facility) கீழ் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பதற்கான பணிக்குழாம் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.

4 வருட (48 மாத) முதிர்வு காலத்துடன் கூடியதாக இந்நிதி வசதி வழங்கப்படவுள்ளதாக IMF அறிவித்துள்ளது.

இலங்கை சுதந்திரம் பெற்றதன் (1948) பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் பிணை எடுப்பதாக இன்று அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டொலர் நிதி வசதியை இலங்கை கோரியிருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், பணிக்குழாம் மட்ட (Staff Level) இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதிய குழுவிற்கும் இடையிலான நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.