QR எரிபொருள் விநியோக முறை ஒத்திவைப்பு

0
193

தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இன்று (25) எரிபொருள் விநியோக அட்டை முறை அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மேற்படி முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், இன்றும் இது ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த இன்னும் சில நாட்கள் ஆகும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here