T-20 உலகக் கிண்ண கிரிகெட்டின், இலங்கை தேசிய அணிக்கான T-Shirt அறிமுகம்

0
257

இவ்வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) ஆண்களுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிகெட்டின், இலங்கை தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ t- shirt அறிமுகப்படுத்தப்பட்டது.

தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தி நிறுவனமான MAS Holdings நிறுவனம் இதனை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தது. MAS Holdings நிறுவனத்தின் தலைவர் மஹேஷ் அமலியன் மற்றும் MAS இன் பிரதான நிறைவேற்று அதிகாரி செலான் குணதிலக ஆகியோரால், இலங்கை ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அணித் தலைவர் தசுன் ஷானக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா ஆகியோரிடம் இந்த புதிய சீருடை கையளிக்கப்பட்டது.

MAS நிறுவனம் 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனத்துடன் நம்பகமான உறவை பேணி வருகிறது. வீரர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடை, வசதி மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம்,  தேசிய கிரிக்கெட் அணிக்காக உலகத்தரம் வாய்ந்த செயல்திறன் ஆடைகளை வடிவமைத்து தயாரித்து வருகிறது.

தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings,  ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தியில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும்  விநியோக  தீர்வு வழங்குநர்களில் ஒன்றாகும். இங்கு 118,000 இற்கும் மேற்பட்டோர் கடமையாற்றுகின்றனர். தற்போது, MAS தனது தயாரிப்புகளை 17 நாடுகளில் முன்னணி நவநாகரீக இடங்களில் அமைந்துள்ள உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here