அமைச்சர் தம்மிக பெரேராவின் சொந்த நிதியில் கடவுச்சீட்டு அலுவலகம்

0
271

ஜுலை மாதம் 4 ஆம் திகதி முதல், கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை மேலும் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்த முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா, தனது சொந்த நிதியைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலக கிளையைத் திறக்கவுள்ளார்.

மாத்தறை, கண்டி மற்றும் வவுனியாவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகங்களிலேயே ஒரு நாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இலங்கையில் மேலும் ஐந்து கிளை அலுவலகங்களைத் திறக்க உத்தேசித்துள்ளதாகவும் அலுவலகங்களை திறக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.

விலைமனுக் கோரல்களை அழைப்பதற்கு ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் செல்லும் என்பதால் தனது சொந்தப் நிதியைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் முதலாவது கடவுச்சீட்டு அலுவலக கிளையை திறக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here