இன்றைய ராசி பலன் – ஜூலை 26,07,2022

0
274

மேஷம் : அசுவினி: உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பரணி: குடும்பத்தினரின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். வருவாய் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சி பலன் தரும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எண்ணம் நிறைவேறும்.
ரோகிணி: வர வேண்டிய பணம் வந்து சேரும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். நன்மையான நாள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: குழப்பம் அதிகரிக்கும். செயல் தடுமாற்றமாகும். விழிப்புணர்வு அவசியம்.
திருவாதிரை: யோசித்து செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
புனர்பூசம் 1, 2, 3: மற்றவர் விஷயத்தில் தலையிடாதீர். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.

கடகம் : புனர்பூசம் 4: எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். பொறுமை அவசியம். பூசம்: அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
ஆயில்யம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டு.

சிம்மம் : மகம்: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
பூரம்: புதிய முயற்சி நிறைவேறும். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.
உத்திரம் 1: பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: பணியிடத்தில் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் ஆலோசனையை அதிகாரிகள் ஏற்பர்.
அஸ்தம்: திட்டமிட்டு செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
சித்திரை 1, 2: வேலை தேடி வந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். விருப்பம் நிறைவேறும்.

துலாம்: சித்திரை 3, 4: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உங்கள் முயற்சி பலிதமாகும்.
சுவாதி: தடைபட்ட செயல்களை மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
விசாகம் 1, 2, 3: நண்பர்களின் உதவியுடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்

விருச்சிகம் : விசாகம் 4: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயலில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் வேண்டாம்.
அனுஷம்: இனம் புரியாத சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும்.
கேட்டை: பணியிடத்தில் கவனம் தேவை. அடுத்தவரை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.

தனுசு : மூலம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும்.
பூராடம்: புதிய முயற்சி பலன் தரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும்.
உத்திராடம் 1: எதிர்பார்த்த அனுகூலம் ஏற்படும். தடைபட்ட பணியை மீண்டும் தொடங்குவீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் தேடி வரும்.
திருவோணம்: விஐபிகளின் ஆதரவுடன் ஒரு முயற்சியை நிறைவேற்றி லாபமடைவீர்கள்.
அவிட்டம் 1, 2: பணியிடத்தில் உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த நல்ல தகவல் வரும்.

கும்பம் : அவிட்டம் 3, 4: குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
சதயம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: நண்பர்களின் ஆதரவுடன் ஒரு செயலை செய்து லாபம் காண்பீர்கள்.

மீனம் : பூரட்டாதி 4: அரசு வழியிலான செயல்கள் இழுபறியாகும். அலைச்சல் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: உடல்நலக்குறைவு உண்டாகும். மருத்துவரிடம் ஆலோசனை பெறுவீர்கள்.
ரேவதி: தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்களை சந்திக்க வாய்ப்புண்டு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here