இறுதிப் போட்டிக்கு இலங்கை அணிக்கு வாய்ப்பு

0
389

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி வாய்ப்பைப் பெற்றுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் இந்திய அணியுடனான போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

டுபாயில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 174 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here