ஒக்டோபர் 9, 148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நுவரெலியா பிரதான அஞ்சலகத்தால் நான்காவது முறையாக இரத்ததான முகாமொன்று 18 செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டது

இந்நிகழ்வில், பிராந்தியா தபால் கண்காணிப்பாளர் எய்ச்,பி,என்,ஜி குணரத்தின , நுவரெலியா தபாலக அதிபர் சந்திக்க அமரகோன் ஆகியோரின் பங்கு பற்றுதலோடு இடம்பெற்ற நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்குட்பட்டவர்கள் இரத்தங்களை சேமிப்பு செய்ய வருகைத்தந்திருந்தனர்

ஆண்டுதோறும் நடைபெறும் இரத்ததான முகாமில் அதிகளவான அஞ்சலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னார்வரதியாக இரத்ததான முகாமில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த இரத்ததான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செ.திவாகரன்