குறைந்த வயதில் வெளிநாடு செல்ல அனுமதி

0
229

வீட்டுப்பணிப்பெண்களாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படுபவர்களின் ஆகக் குறைந்த வயதெல்லை 25 ஆகவும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆகக் குறைந்த வயதெல்லை 23 ஆகவும் பிறநாடுகளுக்கு 21 வயதாகவும் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

தொழிலாளர் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில், வயது எல்லையை திருத்துவது குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்க நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்த்திருத்தங்கள் அமைச்சர் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்க கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, மேற்படி குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here