கோதுமை மா ஏற்றி வந்த லொறி விபத்து

0
125

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் கோதுமை மா ஏற்றிவந்த லொறி ஒன்று இன்று  அதிகாலை விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி கோதுமை மாவு ஏற்றிச் செல்லும் போது சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு விபத்துக்குள்ளான லொறியில் பயணம் செய்த சாரதியும் உதவியாளரும் தெய்வாதீனமாக உயர் தப்பியுள்ளனர்.  மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here