சமபோஷ பக்கெற் திருடியவர் உட்பட ஆறு பேர் விடுதலை

0
153

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டபோது , அவ்வீட்டுக்குள் அத்துமீறி சமபோஷ பக்கெற்றை திருடிய குற்றச்சாட்டில் 51 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் உள்ளிட்ட 6 சந்தேக நபர்களை தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை  நீதிவான் திலின கமகே  உத்தரவிட்டார்.

கொழும்பு – 3, 5 ஆம் ஒழுங்கை, இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டின்மீது தீ வைத்து அவரது கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் ( ஜூலை 9 சம்பவம் ) தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரித்து வரும் நிலையில், அது குறித்த வழக்கு இன்று   கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே நீதிவான் இதற்கான உத்தர்வை பிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here