ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த அமெரிக்க விசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் ‘தி இந்து’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் தடையாக இருந்தமையினால், கோட்டாபய ராஜபக்க்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்திருந்தார்.

இது தொடர்பான மேலதிக உண்மைகளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடாக உறுதிப்படுத்த முற்பட்ட போதிலும், அது தொடர்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என ‘தி இந்து’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது

https://www.thehindu.com/news/international/us-rejects-gotabayas-visa-request-after-recent-ousting-by-mass-protests/article65630801.ece