ஆகஸ்ட் 5 வரை தனீஸ் அலிக்கு விளக்கமறியல்

0
289

விமானத்திற்குள் வைத்து நேற்று பிற்பகல் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் தனீஷ் அலி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஜுலை 13ஆம் திகதி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமையினாலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று டுபாய் செல்ல முற்பட்ட போது இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here