நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா குறுக்குப் பாதையில் லொறியொன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது

இவ்விபத்தில் இருவர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீரியாவையில் இருந்து கொட்டக்கலைக்கு சென்ற லொறியே பதையை விட்டு விலகி சாரதியின் கட்டுபாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தினால் காயமுற்ற லொறியின் சாரதியும் உதவியாளரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

டி.சந்ரு செ.திவாகரன்