தலவாக்கலை – எல்ஜின் வீதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்றின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த நபரை, வாகனங்கள் எதுவும் இல்லாதிருந்தமையினால் பாதிக்கப்பட்டவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்வதில் பெரும் சிரமத்தை எதிர் நோக்கிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று கவுலினா பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி விபத்தில் படுகாயம் அடைந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு எந்த விதமான வாகன வசதிகள் கிடைக்காதமையினால லிந்துலை பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரியின் வாகனத்தின் ஊடாகவே வைத்தியாசலைக்கு கொண்டு செல்ல நேரிட்டது.

குறித்த பொது சுகாதார வைத்திய அதிகாரி தனது மேல் அதிகாரிக்கு அறிவித்து விட்டு அலுவலக வாகனத்தில் துரித கதியில் விரைந்து பாதிக்கப்பட்டவரை லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்தார். விபத்துக்குள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதித்து துரித சிகிச்சைகளும் முன்னெடுக்கப்பட்டது.

இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் இன்று பொதுமக்கள் இபல்வேறு சிரமங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் லிந்துலை பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ரெய்ஷ்னி துரைராஜ் அவர்களுக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.