நாடளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்தபோது இதுவரை 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் 19 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்ப குதியில் இந்த 13 பேரும் வரிசைகளில் கத்திருந்த போது உயிரிழந்துள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டன.

இதனிடையே தற்போதும், நாடளவிய ரீதியில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.