சர்வதேச கிரிக்கெட் நடுவரான 73 வயதான ரூடி கோர்ட்சன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கேப்ட வுனிலிருந்து தனது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது ரிவர்ஸ்டேல் என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் இவருடன் மேலும் மூவர் உயிரிழந் தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து தொடர்பில் அவரின் மகன் ரூடி கோர்ட்சன் ஜூனியர் தென்னாபிரிக்காவின் வானொலி செய்தி சேவை ஒன்றுக்கு தனது தந்தை விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்று தெரிவித்தார்.

தனது நண்பர்கள் சிலருடன் ஒரு கோல்ப் போட்டிக்குச் சென்ற அவர், திங்கட்கிழமை திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் மற்றொரு சுற்று கோல்ப் விளையாட முடிவு செய்ததாகத் தெரிய வருகிறது. என அவரின் மகன் மேலும் தெரிவித்துள்ளார். ரூடி கோர்ட்சன் சர்வதேச கிரிக்கெட்டில் 331 போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.