ஹொரண கல்வி வலய ஹொரண பிரிவு G,C,E,O,l மாணவர்களுக்கான கணித , விஞ்ஞான பாட தொடர் கருத்தரங்கு!

0
271

இலங்கை கோபியோ நிறுவனத்தின் பூரண அனுசரனையில் , அதன் கல்வி செயற்பாட்டாளரும் , தோட்ட புற மக்களுக்கு உதவி கரம் நீட்டிவரும் தொழிலதிபர் V.K.பாலசுப்பிரமணியம் அவர்களின் பூரண கண்காணிப்பு , ஏற்பாட்டில்
ஹொரண கல்வி வலய ஹொரண பிரிவு பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு மே/ஹொ. ஹொரண தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் T.C.ஜீவயோஹினி அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கை முன்னால் அதிபரும் விஞ்ஞான பாட சிறப்பு ஆசிரியருமான H.M.M.பாசில் அவர்கள் முதலாவது கட்டமாக விஞ்ஞான பாட கருத்தரங்கை நடாத்தினார்.

விஞ்ஞான பிரிவில் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை இணங்கண்டு அவர்களுக்கு கைக்கொடுக்கும் முகமாக இத்தொடர் கருத்தரங்கு தொடர்ந்து நடைபெற உள்ளது.

மாணவர்கள் விஞ்ஞானபிரிவில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய வெளி மாவட்டங்களுக்கும் சென்று தான் நிறைவேற்ற வேண்டிய பரிதாப நிலை உள்ளது .

எனவே அவ்மாணவர்களுக்கு தமது மாவட்டத்திலேயே விஞ்ஞான பிரிவில் உயர் தரத்தில் கல்வியை தொடர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இக்கருத்தரங்கு நடாத்தப்படுகின்றது.

இத்தொடர் விஞ்ஞான பாட கருத்தரங்கின் நோக்கம் உயர் தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று ஆசிரியர் தொழிலுக்கு அப்பால் சென்று வைத்தியர் , பொருளியலாளர் போன்ற தொழில்களுக்கு செல்ல மாணவர்களை ஊக்குவிப்பதாகும்.
எனவே இக்கருத்தரங்கிற்கு பாடசாலை மட்டத்தில்இணைப்பை ஏற்படுத்தியது.

ஹொரண கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் S.C.V.நமசிவாயம் மற்றும் ஆசிரியர் K.கனகர் ஆகியோர் ஆவர். மேலும் அதிபர் M.ஆனந்த குமார் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , மாணவர்கள் , பெற்றோர் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றனர் .

சிவா ஸ்ரீதரராவ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here