17 சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி கௌரவிப்பு

0
885

தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகளை அங்கீகரித்துக் கௌரவிக்கும் வென்மேரி விருதுகள் வழங்கும் விழா 2021 – 2022, கடந்த புதன்கிழமை 17.8.2022 அன்று பிற்பகல்-3.30 மணியளவில் யாழ்ப்பாணம் நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. துறைசார் ஆளுமைகள் பலர் கலந்து கொண்ட விழாவுக்கு மேனாள் தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமை வகித்தார்.

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற அவ்விழாவிலே அனுபவம்மிக்கவர்கள், துறைசார் ஆளுமைகள், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேராளுமை விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், பல்துறைசார் ஆளுமை விருதுகள், இளையோர் ஊக்குவிப்பு விருதுகள் எனப் பல பிரிவுகளின் கீழ் மொத்தம் 17 சாதனையாளர்கள் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படனர்.

பேராளுமை விருதுகள்

சுவாமி விபுலானந்தா அடிகள் ஞாபகார்த்த விருது – நடனக் கலைஞர் வேல் ஆனந்தன், தமிழ்தாத்தா கந்த முருகேசனார் ஞாபகார்த்த விருது – பண்டிதர் வீ.பரந்தாமன்
பேராசிரியர் க.கைலாசபதி ஞாபகார்த்த விருது – எழுத்தாளர்  ஐ.சாந்தன்
மகாவித்துவான் பிரம்ம ஸ்ரீ வீரமணி ஐயர் ஞாபகார்த்த விருது – முத்துக்குமார் கோபாலகிருஷ்ணன் ஓவிய மேதை மாற்கு மாஸ்டர் ஞாபகார்த்த விருது – ஓவியமேதை ரமணி ஆகியோருக்கும்

வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்
கவிஞர் இ.முருகையன் ஞாபகார்த்த விருது – கவிஞர் சோ.பத்மநாதன்
மொழியியல் பேராசிரியர் சுசீந்திரராஜா ஞாபகார்த்த விருது – முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் புலவர் மணி ஆ.மூ.செரிபுதீன் ஞாபகார்த்த விருது – கவிஞர் பாலமுனை பாறூக்
குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி சிவபாதசுந்தரம் ஞாபகார்த்த விருது – மருதத்துவ கலாநிதி கனகராஜா நந்தகுமார்
அமரர் தாராகி சிவராம் ஞாபகர்த்த விருது – முன்னாள் பீ.பீ.சி நிருபர் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம், 
விளையாட்டு வீரர், நீச்சல்வீரர் அமரர் மு.நவரட்ணசாமி ஞாபகார்த்த விருது – மரியதாஸ் தொபியாஸ்,  கலையரசு சொர்ணலிங்கம் ஞாபகார்த்த விருது – இராசையா பீதாம்பரம்;, குறமகள் வள்ளிநாயகி ஞாபகார்த்த விருது – திருமதி.கோகிலா மகேந்திரன், கவிஞர் பா.சத்தியசீலன் ஞாபகார்த்த விருது எழுத்தாளர் வண.பிதா.செ.அன்புராசா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இளம் சாதனையாளர் விருதுகள் என அறிவிக்கப்பட்ட விருதுகளில் பல்துறை விளையாட்டுத்துறை சாதனையாளர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த விருது இளம் குத்துச் சண்டை வீராங்கனை செல்வி. இந்துகாதேவி கணேஸ், சிறுவயதில புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து சாதகைள் பல நிகழ்த்திய கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவன் செல்வன் சுந்தரலிங்கம் பிரணவன் , இணையத்தேடல் வழியே சாதனை நிகழ்தத் துடிக்கும் செல்வன் நக்கீரன் மகிழினியன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

கே.சர்வாணந்தா

யாழில் இடம்பெற்ற வெண்மேரி விருது விழா
யாழில் இடம்பெற்ற வெண்மேரி விருது விழா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here