23 பதக்கங்களைப்பெற்று ஓட்டமாவடி தேசிய பாடசாலை சாதனை

0
164
இலங்கைக்கான சர்வதேச International martial Art Association of Srilanka அமைப்பானது தென் கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்திய சர்வதேச திறந்த கராத்தே போட்டியானது கடந்த 01.10.2022ம் திகதி சனிக்கிழமை காலை 08 மணிக்கு பல்கலைக்கழக பிரதான அரங்கில் நடைபெற்றது.
மேற்படி போட்டி நிகழ்ச்சியில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) சார்பில் பங்குபற்றி மாணவர்கள் இரண்டு போட்டிகளிலும் தங்கம்-08, வெள்ளி-03, வெங்கலம்-12 உட்பட 23 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழக உப வேந்தரின் பிரதிநிதியாக கலை, கலாசார பீடங்களின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில்  பல்கலைக்கழக விளையாட்டு ஆலோசனை சபையினரும் கலந்து கொண்டனர்.
பதக்கம் வென்று சாதனை படைத்த வீரர்கலுக்கு கல்லூரி முதல்வர் எம்.ஏ.எம்.ஹலீம் இஸ்ஹாக் மற்றும் பிரதி அதிபர்கள், கல்லூரியின் கராத்தே பயிற்சி ஆசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, இவர்களை திறம்பட ஒழுங்குபடுத்தி பயிற்றுவித்த மெளலவி ஏ.ஆர்.நவாஸ் (Black Belt 3rd Dan, SLKF 2nd Dan) அவர்களுக்கு பாடசாலைச் சமூகம் நன்றி தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here