ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு சிலர் அலரி மாளிகைக்குள் நுழைந்து சொத்துகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில் மேலும் 24 சந்தேக நபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

கொழும்பு தெற்குப் பிரிவுக்குப் பொறுப்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய குறித்த கோரிக்கையை பொலிஸார் முன்வைத்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 011-2421867, 076-3477342, 1997 (Hotline)

ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.